Header Ads

phishing.............!






ணையத்தில் வசதிகள் பெருக பிரச்சனைகளும் வெவ்வேறு வழிகளில் வந்துகொண்டுள்ளது.
இணையத்தில் நமது பயனர் தகவல்களைத் திருட பல்வேறு வழிகளைக் கையாள்வார்கள், அதில் ஒன்று “Phishing” என்பது. போலியான தகவல்களை உண்மை போலவே சித்தரித்து ஏமாற்றி நம்மிடம் தகவல்களைத் திருடுவது.
பார்க்க உண்மையான தளம் போலவே இருக்கும் ஆனால், போலித் தளமாக இருக்கும்.
இதைத் தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள், அவர்களையும் சில சமயம் ஏமாற்றி விடும்.
எனவே, இப்பிரச்சனையைச் சமாளிக்கக் கூகுள் க்ரோம் உலவி வசதியைக் கொண்டு வரப் போகிறது. ஏற்கனவே உள்ள க்ரோம் உலவியிலும் இந்த வசதியை நீங்கள் செயல்படுத்தலாம்.
க்ரோம் உலவியை புதுப்பிப்பது எப்படி?
க்ரோம் உலவியில் Help –> About Google Chrome என்பதை க்ளிக் செய்யுங்கள்  அல்லது chrome://settings/help என்ற முகவரிக்கு சென்றால் போதும்.

க்ரோம் உலவி முகவரியில் chrome://flags/#enable-lookalike-url-navigation-suggestions என்பதைக் கொடுத்தால், பின்வரும் வசதி வரும். அதில் Enabled என்று மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த வசதி எதற்கு என்று எளிமையாகக் கூற வேண்டுமெனில்..
பணப் பரிவர்த்தனை தளமான PayPal பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவர்களுடைய தள முகவரி https://www.paypal.com ஆனால் http://www.paypall.com என்று சிறு மாற்றம் செய்து வைத்து இருப்பார்கள்.
தட்டச்சு செய்யும் போது தவறுதலாக போலி முகவரிக்கு சென்றால், நீங்கள் உண்மையான தளம் என்று உங்கள் பயனர் தகவல்களைக் (User Name & Password) கொடுத்து விடுவீர்கள்.
இது போன்ற தவறுகளைத் தடுக்கத்தான் கூகுள் இந்த வசதியை கொண்டுவந்துள்ளது. இனி தவறான தளம் சென்றால், கூகுள் உலவி உங்களை எச்சரிக்கைப்படுத்தும்.
நீங்கள் அதி புத்திசாலியாக இருந்தாலும், இதைச் செயல்படுத்தி வைத்துக்கொள்வதில் தவறில்லை. யானைக்கும் அடி சறுக்கும்!

No comments:

Powered by Blogger.