இனி நம் இணையக் கணக்கைத் திருடினால்…!
இணையத்தில் நம்முடைய கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? என்பது சந்தேகக் குறி தான்.
இப்பிரச்னையைத் தீர்க்க கூகுள் புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தற்போது அனைவருமே 10 க்கும் மேற்பட்ட தளங்களில் பயனர் கணக்கு வைத்துள்ளோம். உதாரணத்துக்குக் கூகுள், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், யாஹூ போன்றவை.
நம்முடைய கடவுச்சொல் ஏதாவது ஒரு தளத்தில் திருடப்பட்டுள்ளதா? என்பதைக் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள க்ரோம் நீட்சி (Extension) மூலம் உறுதி செய்யலாம்.
அவ்வாறு நம்முடைய கடவுச்சொல் திருடப்பட்டு இருந்தால், க்ரோம் தன்னுடைய டேட்டாபேஸில் சோதித்து நம்மை எச்சரிக்கைப்படுத்தும். இதன் மூலம் நம்முடைய கடவுச்சொல்லை மாற்றி நம் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
தற்போது இந்த வசதி கூகுள் க்ரோம் உலவிக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிறகு எதுவும் பிரச்னை என்றால், உங்களைக் கூகுள் எச்சரிக்கைப்படுத்தும்.
No comments: