Header Ads

மைக்ரோசாப்ட் எட்ஜ் (EDGE) விருதா....




அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான  ஆஸ்கார் என்று அழைக்கப்படும் 70வது  வருட எம்மி (Emmy)  2018 விருதுகள் அறிவிப்பு வெளியாகியள்ளது. இதில் தொழில்நுட்ப பிரிவில்,  காணொளி காட்சிகளை இணையம் வழியாக சிறப்பாக சென்றடையச்  செய்யும் HTML5, Encrypted Media Extensions (EME) Media Source Extensions (MSE) ஆகியவற்றை சிறப்பாக செய்து வரும் மென்பொருளாக மைக்ரோசாப்ட் EDGE பிரவுசர் விருது பெற்றுள்ளது.
பொதுவாக, குரோம் உலாவியை பதிவிறக்கி பயன்படுத்த மட்டுமே Edge உலாவியை பயன்படுத்துவர் எனும் பகடி இணையவெளியில் காணப்படும். ஆனால் காணொளி காட்சி தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளதற்க்காக எட்ஜ் விருது வங்கியுள்ள செய்தி, தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது கவனம் மற்றும் முதலீட்டை எட்ஜ் உலாவிக்காக செலுத்தி வருவதையும். கூகள் குரோம் உலாவிக்கு மாற்றாக எட்ஜ் இடம்பிடிக்க தொடர்ந்து முயற்சிப்பதையும் காட்டுகிறது.
  • W3C
  • Microsoft
  • Comcast
  • Netflix
  • Google
ஆகிய நிறுவனங்களும் தொழில்நுட்ப விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 
சிலிகான் வெளி மென்பொருள் நிறுவனங்கள் பற்றி பகடி செய்யும் நகைச்சுவை தொடர் “Silicon Valley” ,  இயற்பியல் மற்றும் அறிவியல் சார்ந்த நகைச்சுவை தொடர் “The BigBang Theory” ஆகியவையும் இந்த விருதுகள் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Powered by Blogger.