Header Ads

கூகுளால் பணம் கிடைக்குமா…… ?

கூகுள் தான் எடுக்கும் கணக்கெடுப்புக்கு நமக்குப் பணம் தருகிறது ஆனால், அதை நாம் Google Play Store தவிர்த்து வேறு எங்கும் செலவு செய்ய முடியாது.
Google Play Store ல் நமக்கு விருப்பப்பட்ட Apps, Movies போன்ற அவர்கள் அனுமதிக்கும் சேவைகளை, கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் இந்தத் தொகையைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
இதில் நாம் பதில் அளித்தால், கூகுள் தோராயமாக 10₹ முதல் நமக்குத் தருகிறது. எனக்கு மூன்று கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு 30.77 ₹ கொடுத்துள்ளது.
கூகுள் ஏன் நமக்குப் பணம் தர வேண்டும்?
ஆதாயம் இல்லாமல் எவரும் எவருக்கும் எதையும் இலவசமாகத் தர மாட்டார்கள். கூகுளும் விதிவிலக்கல்ல.
கூகுள் இதற்கென்று ஆட்களை நியமித்துக் கணக்கெடுத்து ஆய்வு நடத்தி செய்வதற்கு ஆகும் செலவு மிக அதிகம் ஆனால், அதே தன்னுடைய பயனாளர்கள் மூலமாக ஆய்வுகளை நடத்தினால் செலவு குறைவு.
இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, தன்னுடைய நிறுவனத்தின் தேவைகளை, மாற்றங்களைச் செயல்படுத்தி மேம்படுத்த நினைக்கிறது.
பணம் கிடைக்கிறது என்றால், யாருமே இதில் கலந்து தங்கள் கருத்தை கூற விரும்புவார்கள். எனவே, குறைவான முதலீட்டில் தான் நினைப்பதை சாதிக்க நினைக்கிறது.
இதனால் நமக்குப் பயனுள்ளதா?
கூகுள் கணக்கெடுப்பில் கலந்து கொள்வதால், நமக்கு ஒன்றும் இழப்பு இல்லை. இதைச் செய்ய நமக்கு 2 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. அதோடு அடிக்கடி நம்மைத் தொல்லைப்படுத்தாது.
விருப்பப்பட்டால் இதில் கலந்து கொள்ளலாம், இல்லையென்றால் புறக்கணிக்கலாம். கட்டாயம் எதுவும் கிடையாது. எனவே, இதனால் பயன் மட்டுமே! இழப்பு ஏற்படாது.
இதைப்பயன்படுத்த நீங்கள் “Google Opinion Rewards” செயலியை நிறுவி இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் மட்டும் இருந்த இந்தச் சேவை தற்போது சிங்கப்பூர், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது.

No comments:

Powered by Blogger.