கணினியின் கண்ணிடமிருந்து எம் கண்ணை பாதுகாக்க...!
இங்கு கணினியின் கண் என்பது கணினியின் திரை ஆகும்…!
கணினி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று சொல்லலாம். ஏனென்றால் மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணினி மாறிவிட்டது. அதில் நீங்களும் ஒரு பங்கு வகிக்கிறீர்கள்.
Computer Vision Syndrome (சி.வி.எஸ்) என்று ஒரு பாதிப்பு கணினியில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
கண்ணில் அரிப்பு கண்ணில் எரிச்சல் கண் காய்ந்து போய்விடுவது கண் இறுக்கமாக இருப்பது கண்ணில் நீர் வடிவது அல்லது கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இதன் அறிகுறிகளாகும்.
இதற்கு முதல் காரணமானதும் முக்கிய காரணமானதும் என்னவென்று பார்த்தால் கணினியில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும் போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைவாக இருப்பது தான் என்று தெரியவருகிறது.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்தில் சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணித்தியாலம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை (14 மணித்தியாலம்) கண் சிமிட்ட வேண்டும்.
கணினியில் உட்கார்ந்து வேலை செய்யும் போது கண் சிமிட்டல் குறைந்து விடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது
1. கணினியின் திரை மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி screen விற்கிறது. இதை வாங்கி உங்கள் Monitor-க்கு முன்னால் மாட்டிக் கொள்ளுங்கள் (இது CRT monitor பொருந்தும்).
2. கணினியும் நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. கழுத்துவலி முதுகுவலி வந்து விடும். கவனமாக இருங்கள்.
உங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ முதல் சுமார் 50 செ.மீ தூரம் தள்ளி கணினி திரை இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும்இ கணினி திரைக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்
3. தொடர்ந்து கணினி திரையை பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் மங்கலான பார்வை தலைவலி இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம்இ உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.
4. தொடர்ந்து கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடை இடையில் உங்கள் பார்வையை வேறு பக்கம் மhற்றுங்கள்.(கூடுதலாக பச்சை வர்ணத்தை பாருங்கள்)
5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் கணினி திரையிலிருந்து சுமார் 70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.
6. கணினியில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது
No comments: