கணினி சார்பான சமகால எழுவினாக்கள்
இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எங்கு திரும்பினாலும் தொழில்நுட்ப சாதனங்கள் தான் நம்மை வரவேற்கின்றது. கிராமங்கள் கூட முன்னேற்றம் கண்டுள்ளது.முன்னைய காலங்களில் கிராமத்தவர்கள் பலருக்கு வானொலி தொலைக்காட்சி போன்ற சாதனங்களை கண்ணால் கண்டோ அல்லது கையாளவோ தெரியாத நிலையில் இருந்தார்கள். தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்து கிராமங்களும் நகர வாழ்விற்கு பழக்கப்பட்டுள்ளது என்பது மிகையாகாது.
அந்தவகையில் பார்;கப்போனால் தொழில்நுட்பசாதனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கணினி என்று சொல்லலாம். Charles babbage என்பவர் துளை அட்டை முறைமை எண்ணக்கருவை பயன்படுத்தி analytical engine என்னும் உபகரணத்தை அமைத்தார். இந்த எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டே கணினி உருவாக்கப்பட்டது. 1989 தொடக்கம் 5ம் தலைமுறை கணினியே உலகில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இக் கணினியில் மேம்பட்ட வரைவியல் இடைமுகம் உள்ள பணிசெயல்முறைமைகள் இணைய பல்லூடக பிரயோக மென்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பாரியளவில் நன்மைகளை நாம் பெறக்கூடியதாக உள்ளது.
அத்தோடு இணையம் என்ற வலையமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து கணினியில் நாம் தகவல்களை உடனுக்குடன் பெற வழிவகுக்கின்றது.வெளிநாடுகளிலுள்ளோருடன் உரையாடுவதற்கும் உதவுகின்றது.மாணவர்களின் கற்றலுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள உதவுகின்றது.முதலில் உருவாக்கப்பட்ட கணினியை வைப்பதற்கு ஒரு அறையே தேவைப்படும் தற்போது எங்கும் எடுத்துச்செல்லும் அளவு எளிதானதாக காணப்படுகின்றது.இதன் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய முடிகின்றது.நாம் இதுவரை அறியாத பிரதேசங்களை பார்வையிட முடியும் தொடரறா(online) முறைமூலம் விமான நுழைவுச்சீட்டு(airline ticket) இதியெட்டர்களின் நுழைவுச்சீட்டுகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறான நன்மைகளை நாம் பெற்றுக்கொள்கின்ற போதிலும் நாம் பல சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது.ஆம் கணினியை பயன்படுத்துவோர் ஒவ்வொரு நாளும் சவால்களை எதிர்நோக்கிக்கொண்டுள்ளனர்.இச் சவால்களை நாமே எமக்கு உருவாக்கிக்கொள்கின்றோம்.அதாவது கணினியை நீண்ட நேரம்; பாவனைக்குட்படுத்துவதால் உடல்இஉள பிரச்சனைகள் ஏற்படுகின்றது என விஞ்ஞானிகள் ஆய்வுகள் முலம் கண்டுபிடித்துள்ளனர். நீண்ட நேரப்பாவனையால் முதலில் பாதிக்கப்படுவது கண் தான்.எமது உடலில் முக்கிய உறுப்பும் அது தான்.தொடர்ந்து தொடுதிரையை பார்ப்பதனால் கண் சிமிட்டும் தன்மை குறைவடைகின்றது.இதனால் கண் பார்வைக்கோளாறுகள் ஏற்படுகின்றன.வெளிசிநாடுகளிலும் கல்வியில் இருந்து முழுத்தேவைக்கும் கணினி முக்கியமாக திகழ்வதால் சிறு வயதிலே கண்ணாடி அணிய வேண்டியுள்ளது.
இருளான இடங்களில் கணினியை பாவிப்பதனாலும் இரவு நேரங்களில் தூங்காமல் நீண்ட நேரம் பாவிப்பதனாலும் கண்ணில் புற்றுநோய் ஏற்பட வாய்புள்ளது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.தொடர்ந்து ஒரே இடத்திலிருந்து கையாள்வதால் கால்களுக்கும் கைகளுக்கும் இரத்தோட்டம் செல்வது தடைப்பட்டு தசைகள் விறைப்படைகின்றன.முள்ளந்தண்டுகளிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.உளப்பிரச்சனைகளை பார்க்கப்போனால் மன அழுத்தங்கள் தான் முக்கிய இடம் வகிக்கும்.முகநூல் கீச்சகம் viber whatsapp போன்ற தகவல்களை பரிமாறும் ஊடகங்கள் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அளிக்கின்றன.மன அழுத்தத்தில் தொடங்கி இறப்பில் முடிவடைகின்றது. .
இந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் bluewhale என்ற விளையாட்டு(game).இதனால் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் உள்ளது.சிலர் இவ்வூடகங்களினூடாக தங்கள் காதலை பரிமாறுகின்றனர்.அது தோல்வியடையும் பொருட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்கிறார்கள்.இதுமட்டுமல்லாது பிள்ளைகளை நல்வழியில் இருந்து தவறான பாதைக்கு இட்டுச்செல்கின்றது.இதை நாம் பத்திரிகைகளில் காணலாம்.சிறுவர்கள் இளைஞர்கள் ஆபாச காணொளிகளை பார்வையிடுவதால் அவர்களின் குணங்கள் பழக்கவழக்கங்கள் கீழ்நோக்கிச்செல்கின்றது.பெற்றோர்களுக்கு இவ்வாறான பிள்ளைகளின் நடத்தைகள் பெரும் சவால்களுக்கு இட்டுச்செல்கின்றது.
பிள்ளைகளின் படிப்புக்கான நேரங்கள் குறைவடைகின்றது.கணினியில் தொடர்ந்து விளையாடுவதனால் படிப்பு பின்னோக்கி தள்ளப்படுகின்றது.அதுமட்டுமல்லாது சினிமாக்களுக்கு மாணவர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர்.லழரவரடிந ல் வரும் திரைப்பட முன்னோட்ட காணொளிஇவேற்றுமொழி நாடகங்களில் அவர்களின் கவனம் செல்வதால் எவ்வாறு அவர்கள் தங்கள் கல்வியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுகின்றது.கல்வி என்று வரும் பொழுது உணிமையில் இது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்றது.
முன்னைய காலங்களில் மாலை நேரங்களில் சிறுவர்கள் விளையாட அக்கம் பக்கத்து வீடுகளுக்கு செல்வார்கள் உடம்புக்கு ஒரு உடற்பயிற்சியாக இருக்கும்.ஆனால் இப்பொழுது கணினியுடன் நேரத்தை செலவிடுவதால் விளையாட்டுக்கு என்று நேரம் ஒதுக்குவதில்லை.பருமன் அதிகரிப்பதற்கு வித்திடுகின்றது.எங்கள் சிந்தனைகள் முடக்கப்படுகின்றன.அதாவது பாடசாலைகளில் கட்டுரைகள் எழுதச்சொன்னால் இணையத்தளத்திற்குச்சென்று அதையே அப்பிடியே எழுதுவதால் சிந்தனையாற்றல் குறைவடைகின்றது.நாங்கள்தான் இயந்திரங்களை கட்டுப்படுத்த வேண்டும்.இயந்திரங்கள் எம்மை கட்டுப்படுத்தும் அளவுக்கு நாம் ஒரு போதும் அனுமதிக்ககூடாது.
அதற்காக நாம் கணினி தீமைக்கே வழிவகுக்கின்றது என்று எண்ணக்கூடாது.அது நம் ஒவ்வொருவரின் பார்வையில் அமைநiதுள்ளது.நல்ல விடயத்திற்காக தோற்றுவிக்கப்பட்டதை நாம் நல்ல நோக்கத்தோடு பயன்படுத்த வேண்டும்.அத்தோடு குறிப்பிட்ட நேரத்திற்கு கூடுதலாக பயன்படுத்தாமல் அளவான நேரத்தோடும் தேவைக்கும் பயன்படுத்துவதோடு வேலைகளின் போது நீண்ட நேரம் பயன்படுத்துவராயின்கணினியின் சட்டதிட்டங்களை கடைப்பிடிப்பது உகந்தது.இவ்வாறான பல செயல்கள் முலம் எப்பேர்ப்பட்ட சவால்களையும் தகர்த்தெறிய முடியும்.





Super 👍👍
ReplyDelete