தமிழில் அசத்தும் “Quora”......
கூகுளில் தேடினால், நமக்குக் கிடைக்காத தகவல்களே இல்லையென்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால், கூகுள் கொடுக்கும் தகவல்களில் முக்கிய இடம் பிடிக்கும் தளம் www.quora.com .
இங்கு உறுப்பினராக உள்ளவர்கள், இணையப் பயனாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். நமக்குத் தேவையான பதில் கிடைப்பது மட்டுமன்றி, சுவாரசியமான விவாதங்களையும் காண முடியும்.
ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த தளம் தமிழிலும் வந்த பிறகு இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இத்தளத்தில் நம்முடைய சந்தேகத்தைக் கேள்விகளாகக் கேட்டால், இதில் உள்ளவர்கள் தங்களின் கருத்தை பதிவார்கள். பல சுவாரசியமான கேள்விகளும், அதை விடச் சுவாரசியமான பதில்களையும் காண முடியும்.
எடுத்துக்காட்டுக்கு, “ரயிலில் ஒரு ஈ பறக்கிறது என்றால், ரயில் வேகமாக நகரும் போது “ஈ” அதே இடத்தில் இருக்குமா? அல்லது ஈயை தாண்டி ரயில் சென்று விடுமா?” 🙂 .
இது போலப் பல்வேறு சுவாரசியமான கேள்விகளும், சர்ச்சையான கேள்விகளும் ஏராளமாகக் காணப்படுகின்றன.
இதில் சிலர் மிக விரிவான தகவல்கள் கொடுப்பார்கள், வியப்பாக இருக்கும்.
உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற மட்டுமல்ல, இணையத்தில் பல இடங்களில் சுற்றி சலிப்படைந்து இருக்கும் சமயத்தில், இத்தளம் சென்றால், உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்காகவும், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும்.
பல கேள்விகளுக்கான பதில்கள் உங்களை அசரடிக்கும் என்பதில் ஐயமில்லை.
No comments: