Header Ads

WhatsApp கொண்டு வந்த அட்டகாச வசதி....



WhatsApp சமீபமாக பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக பல புதிய வசதிகளை, பலரும் எதிர்பார்த்த வசதிகளை கொடுத்து வருகிறது.
குழு கட்டுப்பாடுகள்
WhatsApp பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பெரிய பிரச்னை, நம்மிடம் அனுமதி கேட்காமலே ஏதாவது ஒரு குழுவில் நம்மை இணைத்து விட்டு விடுவது தான்.
அதில் இருந்து விலகினால் சம்பந்தப்பட்ட நபருக்கு வருத்தம், சண்டை என்று பெரிய தொல்லை. நமக்கும் எப்படி வெளியே வருவது? என்ற நெருக்கடி இருக்கும்.
இத்தொல்லைகள் இனிமேல் இல்லை.
இனி நம்மை யாராவது குழுவில் சேர்க்க வேண்டும் என்றால், நம்மிடம் அனுமதி பெற வேண்டும் என்ற வசதியைக் கொண்டு வந்துள்ளது.
அதாவது, யாரெல்லாம் நம்மை ஒரு குழுவில் சேர்க்கலாம், சேர்க்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை நம் விருப்பம் போல மாற்றியமைக்கலாம்.
Everyone, My Contacts, Nobody ஆகிய வசதிகள் இருக்கும். இதன்படி நம் விருப்பங்களை மாற்றியமைக்கலாம்.


விருப்பப்பட்டால் எப்படி குழுவில் இணைவது?
Nobody என்பதிலிருந்து My Contacts / Everyone என்று மாற்றி வைக்கலாம் அல்லது அவர்களை “குழு அழைப்பு சுட்டி”யை (Group Invite Link) அனுப்பக்கூறி இணையலாம்.
தற்போது சோதனை (Beta) பதிப்பில் உள்ளது, விரைவில் இவ்வசதி அனைவருக்கும் செயல்படுத்தப்படும்

No comments:

Powered by Blogger.