Header Ads

iPhone க்கும் வந்த “Location Sharing” வசதி.......


Android திறன் பேசிகளில் மட்டுமே இருந்த, கூகுள் வழிகாட்டியின் (Google Map) அசத்தல் வசதியான “Location Sharing” தற்போது iPhone (iOS) க்கும் வந்து விட்டது.
இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பயன்படுத்தி வருகிறவன் என்கிற முறையில் இது சிறப்பான, அவசியமான வசதி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
இந்த வசதியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு “Live” ஆக தெரிவிக்க முடியும்.
நம் நெருங்கியவர்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த வசதியை வைத்து தெரிந்து கொள்வதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம்.
இதில் உள்ள விவகாரமான பிரச்னை
யாரிடமும் “நான் அங்கே இருக்கேன் இங்கே இருக்கேன்” என்று கதை அடிக்க முடியாது.
அப்படியா! எங்க.. Location Share செய்” என்றால், மாட்டிக்கொள்வார்கள் 🙂 .
மனைவியிடம் “நான் அலுவலகத்தில் இருக்கிறேன்” என்று புழுகி விட்டு, வேறு எங்காவது இருந்தால், “எங்க..! Location Share பண்ணுங்க!” என்றால், தொலைந்தது கதை 😀 .
மச்சி! ஐந்து நிமிடங்களில் வந்துடுவேன்” என்று கூறி சமாளிக்க முடியாது.
இதெல்லாம் நகைச்சுவைக்காக கூறி இருந்தாலும், இதனுடைய உண்மையான பயன் அபரிமிதமானது. நம்முடைய திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தலாம்.
Live Share Duration
இதில் பகிரப்படும் கால அளவை நம் விருப்பம் போல மாற்றியமைக்கலாம். உதாரணத்துக்கு குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் முதல், 12 மணி நேரங்கள் –> ஒரு நாள், இரு நாட்கள், எப்போதுமே என்று தொடர முடியும், தேவைப்பட்டால் உடனே நீக்க முடியும்.
மின்னஞ்சலிலும் பகிரலாம், WhatsApp போன்ற செயலிகளிலும் பகிரலாம்.
நீங்கள் வருவதை 1 மணி நேரம் தேர்வு செய்து உங்கள் WhatsApp குழுவில் பகிர்ந்து விட்டால், அவர்கள் நீங்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள்.
அடிக்கடி அழைத்து “எங்கே வந்து கொண்டு இருக்கிறாய்?” என்று உங்கள் கவனத்தை சிதறடிக்க மாட்டார்கள்.
இவ்வசதியை அனைவரும் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.

CLICK HERE →→  👉👉👉 https://youtu.be/u62nPKgLJeg

No comments:

Powered by Blogger.