Header Ads

டெஸ்க்டாப் கேட்ஜெட்களை விண்டோஸ் 10-இல் கொண்டு வருவது எப்படி?


விண்டோஸ் டெஸ்க்டாப் கேட்ஜெட்கள் முதன் முறையாக விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் விண்டோஸ் 7 தளத்திலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக டெஸ்க்டாப் கேட்ஜெட்கள் பிரபலமாக இருந்து வருகின்றன. டெஸ்க்டாப் கேட்ஜெட்கள் நேரம், வானிலை, ஸ்டிக்கி நோட்கள் மற்றும் சி.பி.யு. வேகம் உள்ளிட்டவற்றை காண்பிக்கும். இவற்றை நம் டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறன. எனினும் விண்டோஸ் 8 வரவுக்கு பின் இந்த அம்சம் மாற்றப்பட்டு விட்டது. கூடுதல் அம்சங்கள் லைவ் டைல்கள் வடிவில் விண்டோஸ் 8 தளத்தில் சேர்க்கப்பட்டன. விண்டோஸ் தளத்தில் ஸ்டார்ட் ஸ்கிரீன் போன்றே முதலில் நீக்கப்பட்டு அதன்பின் டெஸ்க்டாப் கேட்ஜெட்களும் வழங்கப்படுகின்றன. டெஸ்க்டாப் கேட்ஜெட்கள் மூலம் ஹேக்கர்களால் மிக எளிமையாக பயனரின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து விட முடியும் என்ற அபாயம் எழுந்ததும், இவை பயன்பாட்டில் இருந்து நீக்கும் முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்தது. எனினும் டெஸ்க்டாப் கேட்ஜெட்களை விண்டோஸ் 10 தளத்தில் பெற வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்டோஸ் 10 தளத்திலும் டெஸ்க்டாப் விட்ஜெட்களை பெறலாம்..

 விட்ஜெட்ஸ் ஹெச்.டி. (Widgets HD ) மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயிலைய கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும். பின் இதை கொண்டு நீங்கள் விரும்பும் விட்ஜெட்களை டெஸ்க்டாப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். விட்ஜெட்களை விண்டோஸ் 10 டெஸ்க்டாப்பில் நீங்கள் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா போன்றே, X பட்டன் கொண்டு விட்ஜெட்களை நீக்க முடியும். இத்துடன் செட்டிங் ஆப்ஷன் மூலம் விட்ஜெட்களை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இந்த செயலி பயன்படுத்த இலவசமாக கிடைக்கிறது என்றாலும், இதில் பணம் கொடுத்து பயன்படுத்தும் வகையில் சில அம்சங்கள் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.

 விண்டோஸ் டெஸ்க்டாப் கேட்ஜெட்கள் (Windows Desktop Gadgets) பல்வேறு மொழிகளில் இயங்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென்பொருள் குறைந்த மெமரியில் பெருமளவு விண்டோஸ் டெஸ்க்டாப் கேட்ஜெட்களை வழங்குகிறது. இதை பயன்படுத்த முதலில் Desktopgadgetsrevived-2.0.exe ஃபைலில் இருந்து எக்ஸ்டிராக்ட் செய்து அதன்பின் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்ததும் விண்டோஸ் விஸ்டா / விண்டோஸ் 7 போன்ற கேட்ஜெட்களை பெறலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கேட்ஜெட்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் நீங்கள் தேர்வு செய்த கேட்ஜெட்கள் கன்ட்ரோல் பேனலில் சேர்க்கப்பட்டு இருக்கும். இவற்றை கன்ட்ரோல் பேனலில் இருந்தபடி இயக்கலாம். இனி கேட்ஜெட்களை டெஸ்க்டாப்பிற்கு சேர்க்க அவற்றை கிளிக் செய்து டிராக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து நீங்கள் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

 8கேட்ஜெட்பேக் (8GadgetPack) இந்த செயலியும் குறைந்த மெமரியில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை கொண்டு கேட்ஜெட்களை விண்டோஸ் 8.X மற்றும் விண்டோஸ் 10 உள்ளிட்டவற்றில் இயக்க முடியும். 8கேட்ஜெட் பேக் பயன்படுத்த லின்க் பயன்படுத்தி எம்.எஸ்.ஐ. ஃபைலினை டவுன்லோடு செய்ய வேண்டும். பின் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். டெஸ்க்டாப் ஃபைல் இன்ஸ்டால் ஆனதும், + பட்டன் கிளிக் செய்து திரையில் தோன்றும் கேட்ஜெட்களில் ஒன்றை டெஸ்க்டாப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.